GNOME 3.2 வெளியீட்டு குறிப்புகள்

1. அறிமுகம்

க்னோம் திட்டம் ஒரு பன்னாட்டு சமூகம் எல்லாருக்கும் உயர்ந்த மென்பொருட்களை அளிப்பது. க்னோமின் கவனம் சுலபமான பயன்பாடு, உறுதியான நிலை, முதல் தர உலகளாவிய ஆக்கம் மற்றும் அணுகல். க்னோம் இலவச திறந்த மூல மென்பொருளாகும். இது என்னவென்றால் எங்கள் உழைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், மாற்றலாம் மற்றும் மறூ வினியோகம் செய்யலாம்.

க்னோம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வெளியிடப்படும். 3.0 பதிப்பு வெளிடப்ப்ட்ட பிறகு, தோராயமாக 1270 பேர்கள் 38500 க்னோம் இல் மாற்றங்களை செய்து இருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என் அறிய ஆவலா? எங்களை இங்கு தொடருங்கள் ஐடென்டி.கா, ட்விட்டர் or பேஸ்புக்.

நம் உற்பத்திப்பொருட்களை இன்னும் மேம்பட்டதாக ஆக்க நீங்கள் உதவ நினைத்தால் எங்களுடன் சேருங்கள். எப்போதுமே ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்ப்போர், சந்தைப்படுத்ததில் உதவி, ஆவணங்கள் எழுதுவோர், சோதனை செய்வோர் அல்லது மேம்படுத்துவோர் தேஎவ்வையாக உள்ளது.

நீங்கள் பொருள் ரீதியாகவும் எங்களை ஆதரிக்கலாம். அதற்கு இதன் உறுப்பினர் ஆகுங்கள் Friend of GNOME.

மற்றவர்களுடன் 3.2 வெளியீட்டை கொண்டாட விரும்பினால், அருகில் எங்கே வெளியீட்டு விழா நடை பெறுகிறது எனப்பாருங்கள்!

2. பயனர்களுக்கு என்ன புதிது

2.1. 3.0, வளர்ந்தது

பயனர்களின் பின்னூட்டங்களின் அடிப்படையில் ஏராளமான சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் க்னோம் 3.2 வில் இன்னும் நெகிழ்வான அனுபவம் கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க சில சிறப்பு அம்சங்கள்:

  • இப்போது சாஅள்ரத்தை சுலபமாக மறு அளவு செய்யலாம். இதற்கான இடம் அதிகமாக்கப்பட்டுள்ளது.
  • கணினி அமைப்பு இப்போது வேறிடத்தில் உள்ள தொடர்புள்ள அமைப்புகளுக்கு தொடுப்புகள் உடையது. உதாரணமாக விசிப்பலகை தொகுதியில் விசைப்பலகை அமைப்பு க்கு ஒரு தொடர்பு உள்ளது.
  • தலைப்பு பட்டைகள், பொத்தான்கள், மற்ற கட்டுப்படுத்திகள் இப்போது உயரம் குறைவாக உள்ளன. சின்ன திரைகளில் க்னோம் ஐ பயன்படுத்துவது எளிதாகிவிட்டது.
  • கீழ் வலது மூலையில் உள்ள அறிவிப்புகள் ஒரு எண்ணிக்கை பொறியுடன். இதனால் மின்னஞ்சல் நிரலை திறக்காமல் எத்தனை மின்னஞ்சல்கள் உள்ளன என காணலாம். அல்லது ஒரு அரட்டையில் எத்தனை வரிகள் நீங்கள் காண தவறினீர்கள் என காணலாம்.
  • ஒரு பயன்பாடு ஏற்கெனெவே இயங்கிக்கொண்டு இருக்கிரது என காட்டும் சிறப்பு சுட்டு வசதி இன்னும் வெளிப்படையாகிறது
  • பயனர் மெனுவில் அறிவிப்புகளை அரட்டை நிலையில் இருந்து பிரித்து அமைக்கலாம்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட பணிக்களத்தை பயன் படுத்தும்போது மேற்பார்வையில் பணிக்கள மாற்றி முழு அகலத்துக்கும் காண்கிறது.
  • எவலோஷனை, விட்டு நாள்காட்டி கீழ் இறக்க பயன்பாடு தனியாக அமைக்கப்படலாம்.
  • மின்கல நிலை இப்போது ஒரு பட்டை மூலம் காட்டப்படுகிறது.
  • குவிப்பு சொடுக்கியை பின் தொடர்கிறது கையாளல் மேம்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் மேம்படுத்தல் இயலும்.

படித்தபின் அதைப்பற்றி கருத்து தெரிவித்தலை தயை செய்து தொடருங்கள்.

2.2. ஆன் லைன் கணக்குகள்

ஆவணங்கள், தொடர்புகள், நாட்காட்டிகள், யாவும் கணினியிலேயே சேமிக்கலாம். ஆயின் இப்படிப்பட்ட தகவல்களை வலையில் சேமிப்பது இப்போது பழக்கமாகி வருகிறது. க்னோம் 3.2 Online Accounts ஒரு இடத்தை இம்மாதிரி சேமிப்புகளுக்கு மேலாள இடம் தருகிறது. இந்த கணக்குகள் தானியங்கியாக பின் வரும் பயன்பாடுகளால் உபயோகிக்கப்படுகிறது. Documents, Contacts, Empathy, Evolution மேலும் கீழிறங்கும் நாட்காட்டி .

Figure 1ஆன் லைன் கணக்குகள்

2.3. வலை பயன்பாடுகள்

சில வலைத்தளங்களை பயன்பாடுகள் போலவே உபயோகிக்க முடியும். கணினி துவங்கிய உடனே சில தளங்கள் திறந்துவிடும்; அதாவது அது எப்போதுமே திறந்து உள்ளது. அவ்வப்போது சரி பார்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த தளங்கள் எல்லாவற்றையும் க்னோம் ஒரு பயன்பாடாக கருதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

க்னோம் 3.2 ஒரு தளத்தை ஒரு பயன்பாடாக உபயோகிக்க வழி வகுக்கிறது. இது Epiphany எங்கள் செந்தர வலை உலாவியால் சாத்தியமாகிறது. இப்படிச்செய்ய Ctrl-Shift-A ஐ அழுத்தவும், அல்லது File மெனுவை திறந்து Save as Web Application ஐ தேர்ந்தெடுக்கவும். வலை பயன்பாடு உருவானதும் அதை மேல்பார்வையில் இருந்து துவக்க முடியும்.

Figure 2சிறு வலைப்பூ வலை பயன்பாடாக

இதன் லாபங்களின் சிறு பட்டியல்:

  • வலை பயன்பாடுகள் சுலபமாக மேற்பார்வை பாங்கில் துவக்கப்படலாம். அவை அபிமானமாக குத்திடப்படலாம்.
  • முழு சாளரமும் அந்த தளத்துக்கு கிடைக்கும்.
  • பயன்பாடு சேமித்த தளத்துக்கு மட்டுமே. வேறெங்கும் ஒரு தொடுப்பை சொடுக்கி போக விரும்பினால் அவை சாதாரண உலாவி சாளரத்தில் திறக்கும்.
  • சாளரத்தை மாற்ற அல்லது வலைப் பயன்பாட்டை துவக்க பயன்படும் சின்னம் தளத்தின் லோகோ அல்லது வெட்டப்பட்ட திரைவெட்டை காட்டுகிறது
  • வலைப்பயன்பாடு என்பது உலாவியின்றும் வேறுபட்டது. உலாவி சிதைந்தாலும் வலைப்பயன்பாடு பாதிக்கப்படாது.

2.4. உங்கள் தொடர்புகளை மேலாளவும்

தொடர்புகள் என்பது மக்களுக்கான புதிய பயன்பாடாகும். இதன் நோக்கம் மக்களின் மேல் பார்வை ஒன்றை தருவது; அவர்கள் வலையில் சேமிக்கப்பட்ட தொடர்புகளோ, அல்லது எவலூஷன் இலோ எம்பதிஇலோ உள்ள தொடர்புகளோ.

Figure 3தொடர்புகள் பயன்பாடு

2.5. உங்கள் ஆஅவணங்களையும் கோப்புகளையும் மேலாளவும்

நிறைய ஆவணங்களை மேலாளும்போது அவற்றை கவனத்தில் வைப்பது கடினமாகும். இதை சுலபமாக்க க்னோம் 3.2 இல் சில படிகள் உள்ளன.

2.5.1. பயனுள்ள கோப்பை திற மற்றும் சேமி உரையாடல்கள்

கோப்புக்களை திறப்பதும் சேமிப்பதும் சுலபமாகிவிட்டது. ஒருன்பயன்பாட்டில் ஒரு கோப்பை திறக்கும்போது க்னோம் சமீபத்திய கோப்புகளின் பட்டியல் ஒன்றை காட்டுகிறது. அதே போல சமீபத்திய அடைவுகளின் பட்டியலையும் கோப்பை சேமிக்கும்போது காட்டுகிறது.

Figure 4கோப்பை சேமிக்கும்போது சமீபத்திய அடைவுகளின் பட்டியல்

2.5.2. ஆவணங்கள் பயன்பாடு

க்னோம் 3.2 இல் ஆவணங்கள் பயன்பாடு அவற்றை கண்டுபிடிக்க, அடுக்க, காண எளிய திறம்பட்ட வழியை தருவதில் குவிப்புடன் உள்ளது.

Figure 5புதிய ஆவணங்கள் பயன்பாடு

வலை இணைப்பு கணக்குகள் ஒருங்கிணைப்பால் ஆவணங்கள் வலையில் உள்ளதோ அல்லது உள்ளமைந்து இருக்கிறதோ அவற்றை தேடுவது ஒன்றேதான்.

Figure 6ஆவணங்கள் வலை இணைப்பு ஆவணங்களை காட்டுகிறது.

2.6. உங்கள் கோப்புகளை கோப்பு மேலாளரில் விரைவாக முன் பார்வையிடுக

கோப்பு மேலாளர் இப்போது விரைவில் நகர்படங்கள், இசை, படங்கள் மற்றும் மற்ற கோப்புக்களை முன் பார்வை இடும். முன் பார்வை காட்டவோ மறைக்கவோ ஸ்பேஸ் விசையை மீண்டும் மீண்டும் அழுத்துவதால் கூடும்.

Figure 7க்னோம் 3 வெளியீட்டு விழா படங்களின் விரைவு முன் பார்வை

2.7. அதிகப்படி ஒருங்கிணைப்பு

2.7.1. நிற மேலாண்மை

நிறங்கள் காட்டப்படும் வழிகள் வித்தியாசமாக உள்ளதால் ஒரே படம் வெவ்வேறு திரைகளில் வித்தியாசமாக காணப்படலாம். அதே போல படங்கள் அச்சிடப்படும்போது நிறங்கள் மாறலாம்.

க்னோம் 3.2 உங்கள் கணக்கிடும் சாதனங்களை அளவ்விட அனுமதிக்கிறது. இதனால் நிறங்கள் சரியானபடி பிரதிநிதிக்கப்படும்.

Figure 8கணினி அமைப்பில் நிற மேலாண்மை

2.7.2. செய்திஅனுப்புதல் உட்பொதியப்பட்டது

நீங்கள் இனி அரட்டை செய்தி அனுப்புதல் ஆகியவற்றுக்கு தனித்தனி பயன்பாடுகளை திறக்கத்தேவையில்லை. 3.2 இல் க்னோம் அதை உங்களுக்கு செய்யும்.

  • திரையின் மேல் வல மூலையில் உள்ள பயனர் மெனு மூலம் இருக்கிறேன், இல்லை நிலைகளை விரைவாக மாற்றவும்.
  • புதிய நண்பன் வேண்டுதல்கள், ஆடியோ விடியோ அழைப்புகள், கோப்பு இட மாற்றங்கள் ஆகியவற்றை ஏற்க, நிராகரிக்க இயலும்
  • ஒரு அரட்டை அல்லது செய்தி அனுப்புதல் சேவையின் இணைப்பு பிரச்சினை இருப்பின் உடனடியாக தெரிந்து கொள்ளலாம்.

2.7.3. வாகாம் வரைகலை தொடுதட்டு

வாகாம் வரைகலை தொடுதட்டு கணினி அமைப்புகள்இல் அமைக்க முடியும்.

2.7.4. உள்நுழைவு திரை

க்னோம் 3.2 இன் உள்நுழைவு திரை ஏனைய பயனர் அனுபவத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Figure 9உள்நுழைவு திரை

2.7.5. தொடுதிரை சாதனங்கள்

டேப்லெட்டுகள் மற்றும் அது போன்ற தொடுதிரை சாதனங்கள், இவற்றில் சாதனத்தை சுழற்றினால் திரையும் தானியங்கியாக சுழலும். கூடுதலாக தொடு திரை சாதனங்கள் சொடுக்கியை இணைத்தால் ஒழிய சொடுக்கி நிலை காட்டியை காட்டாது.

2.7.6. ஊடக நிலை மாற்றா சொருகல்

க்னோம் 3 இல் இப்போது ஊடக நிலை மாற்றா சொருகல் அறிவிப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Figure 10நிலை மாற்றா சொருகல் அறிவிப்பு

2.7.7. தொடர்புகள் தேடல்

மேல்பார்வை பாங்கு உங்கள் தொடர்புகளில் தேட ஒரு தேடல் பெட்டியை தந்து உதவுகிறது.

Figure 11மேல்பார்வை பாங்கில் தொடர்புகள் தேடல்

2.8. உண்மையில் உங்களுக்கு உதவும் ஆவணமாக்கம்

பாரம்பரியமாக பயனர் ஆவணம் ஒரு பேப்பர் புத்தக்ம் போல எழுதப்படும். நல்ல கதைதான் ஆனால் அதை படித்து முடிக்க வெகு காலமாகும். இது சீக்கிரமாக ஒரு விஷயத்தை எப்படி செய்வது என அறிய தோதாக இல்லை. இதை சரி செய்ய பின் வரும் பயன்பாடுகளுக்கு தலைப்பு ஒட்டிய ஆவணங்கள் கிடைக்கின்றன:

மேல்மேசை உதவி க்கு ஏராளமான மேம்பாடுகளும் கூடுதல் வசதிகளும் வந்துள்ளன.

2.9. இன்னும் மிக அழகாக

3.2 க்கு நிறைய காட்சி மெருகூட்டம் கிடைத்துள்ளது. GTK+ இல் சிஎஸ்எஸ் ஆதரவின் பால் செய்யப்பட்ட வேலை இல்லையானால் இது நிகழ்ந்து இராது. பிரிவு 4.2 ― GTK+ 3.2 இல் மாற்றங்களுக்கு உருவாக்குவோர் பகுதியை காண்க.

காட்சி மெருகூட்டம் உள்ளடக்கியது

  • கருப்பு கருத்து: ஊடக பயன்பாடுகள் இப்போது ஒரு கருப்பு கருத்தை தேந்தெடுக்க இயலும். மூவி ப்ளேயர் மற்றும் இமேஜ் வ்யூவர் இதை பயன்படுத்துகின்றன.
  • சாளர மூலைகள் இப்போது வழுவழுப்பாக ஆன்டி அலைஸ் செய்யப்பட்டுள்ளது.
  • அரட்டை அறிவிப்புகள் இன்னும் மனதிற்கினியதாக உள்ளன.
  • வெட்வொர்க் உரையாடல் போன்ற பல உரையாடல்கள் க்னோம் ஷெல் பாணியுடன் பொருந்துகின்றன.
  • உன்னிப்பாக காண்வோருக்கு காட்சி மேம்பாடுகள் பல உள்ளன. பொத்தான் குறிகளில் நிழல், புதிய உள்ளமை கருவிப்பட்டை, தூக்கிய பொத்தான் பாங்கு, திருத்திய அழுத்திய பொத்தான் ஆகியன சில. கூடுதலாக விசைப்பலகையை ஒரு பயன்பாட்டுடன் ஊடாட பயன்படுத்தும்போது மட்டுமே குவிப்பு செவ்வகம் தெரியும்.

2.10. ம்ம்ம் இருங்க, இன்னும் இருக்கு...

இந்த பெரிய மாறுதல்களுடன் வழக்கமாக எல்லா க்னோம் வெளியீடுகளுடன் நடக்கும் சிறு கூடுதல்கள், நுண் திருத்தங்கள் பல உண்டு.

  • ஆவனங்களை அணுகவும் மாற்றவும் பகிரவும் இயலும் ஆப்பிள் பைலிங் ப்ரோடோகால் (AFP) மூலம்.

  • மூவி ப்ளேயர் இல் இப்போது ஒரு புதிய சொருகி உண்டு. அது படம் பக்கவாட்டில் இருந்தால் நேராக்க உதவும். உதாரனமாக ஸ்மார்ட் அலைபேசி, படகாமிரா இவற்றால் பதிவு செய்யப்பட்டவை.

  • குறியாக்கம் மற்றும் சான்றிதழ் அளித்தல் முன்னேற்றங்கள்:

    • சான்றிதழ்கள், விசைகள் ஆகியவற்றுக்கு பயன்பாடுகளுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகல். பிகேசிஎஸ் #11 மூலம் சான்றிதழ் அதிகாரிகள், விசைகள் மற்று ஸ்மார்ட் அட்டைகள் ஆகியவற்றை கையாளும் போது சமமான நடத்தை. (3.4 இல் இதற்கும் மேலான மேம்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.)

    • சான்றிதழ்கள் விசை கோப்புகளுக்கு புதிய காட்டி. இதனால் கோப்பு மேலாளர் இல் இரட்டை சொடுக்கு சொடுக்கி அவற்றை விரைவில் காணலாம்.

      Figure 12சான்றிதழ்கள் மற்றும் விசை கோப்புகளுக்கு காட்டி

  • எம்பதி இன் முந்தைய பேச்சுவார்தைகளுக்கான பதிவேடு காட்டி சுத்தமான வடிவமைப்பில் உள்ளது. எம்பதி இப்போது எஸ்எம்எஸ் அனுப்புதலை ஆதரிக்கிறது. சிப் கணக்குகளை பிஎஸ்டிஎன் அழைப்புகளை செய்யுமாறு குறிக்கலாம். அந்த மாதிரி கணக்குகளால் தரை வழி போன்களையும் அலை பேசிகளையும் அழைக்கலாம்.

    Figure 13எம்பதி பதிவேடு காட்டி
  • வலைப்பின்னல் மேலாளர் பதிப்பு 0.9 வேகமான பயனர் மாற்றம், மேம்பட்ட வைஃபை உலாவல், நெகிழ்வான அனுமதிகள் மற்றும் மையப்படுத்திய வலைபின்னல் தகவல் சேமிப்பு ஆகியவற்றை அளிக்கிறது.

  • எவலூஷன் இப்போது கூகுள் முகவரி புத்தக்த்தில் உள்ள தொடர்புகளின் சிறு படங்களை காட்ட இயலும். மேலும் ஒரு அஞ்சல் சேவையகத்தின் துறை எண்ணை அமைக்க முடியும் என்பதை தெளிவாக்க தனி புலம் ஒன்றூ தரப்பட்டுள்ளது.

  • உரை திருத்தியான கெடிட் மலார்ட் மற்றும் மார்க்டவுன் கோப்புகளுக்கு துண்டுகளை அளிக்கிறது. மேலும் விரைவுதிறப்பும் தேடல் உரையாடல்களும் புதிப்பிக்கப்பட்டுள்ளன.

  • இன்னும் பல செயல் மேம்பாடுகள். மிகவும் கண்ணில் படுவது முழுத்திரை 3டி விளையாட்டுக்கள்.

  • கணினி அமைப்புகள் இல் வட்டார பலகத்தில் வட்டார அமைப்பை அமைக்கலாம்.

  • மாற்றி வடிவமைத்த புதிய எழுத்துரு தேர்வி உரையாடல்

    Figure 14புதிய எழுத்துரு தேர்வி ( கெடிட் இல்)

3. அணுகலில் என்ன புதிது

இன்றைக்கு க்னோம் 3.2 அணுகலுக்கு மிக உகந்த மேல் மேசையாகும். எல்லாருக்கும் நம்பகமானதாயும் பயன்படுவதாயும் உள்ளதில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

க்னோம் 3.2 வரை உதவி தொழில் நுட்ப பயனர்களுக்கு ஒரு இரு தலை கொள்ளி எறும்பு நிலை இருந்தது. அணுகல் ஆதரவை இயங்கு நிலையில் துவக்க இயலவில்லை. AT-SPI2 இல் இப்போது உள்ள மேம்பாடுகள் காரணமாக மேல்மேசைகள் ஊடே அணுகல் ஆதரவு செயலில் உள்ளதா என அறிவதும் செயலாக்குவதும் முடிகிறது. க்னோம்தான் இதை முதலில் செய்துள்ளது. ஆகவே மேல்மேசைகள் ஊடே வேலை செய்ய இன்னும் மேம்பாடுகள் தேவையாக உள்ளது.

மற்ற மேம்பாடுகள்:

  • திரை விசைப்பலகை தேவையானவர்களுக்கு அதி நவீனமான ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    Figure 15திரை விசைப்பலகை
  • விசைப்பலகையுடன் மேல்பார்வை பாங்கு இப்போது முன் எப்போதையும் விட நன்றாக வேலை செய்கிறது. முழுமையாக விசைப்பலகை மூலம் நகர்வதுடன் திரைப்படிப்பி Orca பயனர்கள் உலாவும் போது நம்பகமான துல்லிய முன்வைப்பை பெறுகிறார்கள்.

  • Orca இன் இன்ட்ரோஸ்பெக்ஷன் நகர்வு க்னோம் இன் திரை படிப்பியை கண்டபடி விரைவாக்கி உள்ளது. இப்போது ஏடிகே பாலம் உதவி தொழில் நுட்பங்கள் செயலில் உள்ளபோது சமிக்ஞைகளுக்கு மட்டுமே செவிசாய்க்கிறது. ஆகவே அணுகல் ஆதரவு கணினியின் செயல்பாட்டை தரம் தாழ்த்த தேவையில்லை.

  • அணுகல் சேவை இடைமுகம் AT-SPI2 வெகுவாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது: சிதைவுகள், நினைவக ஒழுக்குகள், மற்றும் பலவித வழுக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • க்னோமின் அணுகல் செயலாக்க நூலகம் Gail GTK+ உடன் முழுக்க முழுக்க ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது. ஆகவே அணுகல் இப்போது உள்ளமைந்தது, மேலே திணிக்கப்பட்டதல்ல என்ற நிலைக்கு இன்னும் அருகில் உள்ளது.

4. உருவாக்குவோர் க்கு என்ன புதியது

கீழ் காணும் மாற்றங்கள் க்னோம் 3.2 உருவாக்குவோர் தளத்தை பயன்படுத்துவோருக்கு முக்கியமானது. இந்த மாறுதல்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லையானால் அடுத்து இங்கே போகலாம்: பிரிவு 5 ― பன்னாட்டுமயமாக்கம்.

3.2 இல் சேர்த்து உள்ளது மிக நவீன க்னோம் உருவாக்குவோர் தளம். இதில் ஏபிஐ, ஏபிஐ (API- மற்றும் ABI-) நிலையான நூலகங்கள் க்னூ எல்ஜிபிஎல் கீழ் கிடைக்கின்றன. இவை பல தளங்களின் ஊடே செயலாகும் பயன்பாடுகளை உருவாக்க பயன்படும்.

க்னோம் உடன் உருவாக்குதல் குறித்து மேலும் அறிய இங்கே செல்லவும்க்னோம் டெவலபர் சென்டர்.

4.1. ஜிலிப் 2.30

க்னோமின் கீழ் மட்ட மென்பொருள் பயன்பாடு நூலகம்ஜிலிப் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது:

  • ஜிஅப்ளிகேஷன் ஐ பல தனித்துவமில்லா பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம்.
  • ஜிலிப் இப்போது யூனிக்ஸ் குறிப்பான ஏபிஐ களுக்கான தனி தலைப்பை நிறுவுகிறது: glib-unix.h. ஏனையவற்றுக்கு நடுவே இது யூனிக்ஸ் சமிக்ஞைகளுக்கு முதன்மைசுருள் மூலத்தை அளிக்கிறது.
  • ஜிடிபஸ் 'பொருள் மேலாளர்' பாணியை பல இடைமுகங்களுடன் ஆதரிக்கிறது.
  • ஜிடிபஸ் க்கு இப்போது ஒரு குறியாக்க பிறப்பி உள்ளது: gdbus-codegen.
  • அணுக்களின் செயல்கள் ஜிசிசி உள்ளமைவுகளை பயன்படுத்தி மீண்டும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் மிகக்குறிப்பான அழைப்புகள் பிரச்சினையாக இருக்கலாம்.
  • சுட்டிகளின் மீது அணுக்களின் செயல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சுட்டி அளவு இடங்களில் பிட் லாக் களும் இதில் அடங்கும்.
  • அலகுகளின் கோட்பாடு மாறியுள்ளது. இப்போது தேர்வு SI அலகுகள்; g_format_size_for_display கைவிடப்பட்டு g_format_size சேர்க்கப்பட்டுள்ளது.
  • HMAC சுருக்கங்களுக்கு ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது: GHmac.
  • சான்றிதழ் மற்றும் விசைகள் காண ஒரு இடைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது. : GTlsDatabase. இதன் செயலாக்கம் க்லிப்-வலைப்பின்னலால் தரப்படுகிறது.

4.2. GTK+ 3.2

GTK+ 3.2 புத்தம் புதிய GTK+ கருவிப்பெட்டி ஆகும். இது க்னோமின் இதயத்தில் உள்ளது. GTK+ 3.2 இல் உருவாக்குவோருக்கு பல புதிய அம்சங்களும் ஏராளமான வழு நீக்கமும் உள்ளது.

  • உள்ளீடுகளில் இப்போது சிறுகுறிப்புகள் இருக்கலாம்.gtk_entry_set_placeholder_text.
  • இன்னும் பல சிறுநிரல்கள் உயர-அகல ஜியோமிதி மேலாண்மையை ஆதரிக்கின்றன. குறிப்புகளிலும் சாளர அளவிலும் நியாயமான அளவை அமைப்பது முக்கியம்.
  • புதிய சிறுநிரல்கள்:
    • GtkLockButton கட்டுப்பாட்டு மையத்தில் காண்பது போன்ற சிறப்பு சலுகை செயல்பாடுகள்
    • GtkOverlay ஒரு வலை உலாவி போன்ற உள்ளடக்கம் உள்ள பரப்புக்கு மிதவை கட்டுப்படுத்திகளை தரும்.
    • GtkFontChooserDialog, புதிய எழுத்துரு தேர்வு உரையாடல்.
  • சிஎஸ்எஸ் கருத்து ஆதரவு மிகவும் மேம்படுத்தப்பட்டது. முதனமி உள்லமை கருவிபட்டைகளுக்கு பாங்கு வகுப்புகளையும் இவை உள்ளடக்கும்.விரும்பினால்
  • ஹெச்டிஎம்எல் பின்புல பயன்பாடு Broadway, வெப்ஸாக்கெட்டுகளால் உலாவியில் வரைகிறது. இதுவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது ஒரு சோதனையே. இதன் நோக்கம் உங்களை உங்கள் சேவையகத்தில் உங்கள் பயன்பாடுகளை இயக்கி அவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகலாம். அல்லது ஒரு பொது சேவையகத்தில் வைத்து ஒவ்வொரு பயனருக்கும் பயன்பாட்டின் தனி இயக்கத்தை துவக்கலாம். இதற்கு இவற்றை கம்பைல் செய்ய வேண்டுமென அறிக: GTK+ , --enable-x11-backend --enable-broadway-backend உடன் மற்றும் சூழ்நிலை மாறி GDK_BACKEND ரன்டைமில்
  • ரெப்டெஸ்ட் ஆதரவுசேர்க்கப்பட்டுள்ளது இதனால் சோதனை கேஸ் களை எழுதுதல் சுலபமாகிறது.
  • பல GTK+ செயல் முன்னேற்றங்கள்நடந்துள்ளன இவை இடைநினைவக அளவு வேண்டல்கள், சிஎஸ்எஸ் பாணி தகவல்கள், மற்றும் சிறுநிரல் அளவு கணக்கு ஆகியன்.

4.3. க்லட்டர் 1.8

வன்பொருள் முடுக்கிய பயனர் இடைமுகங்களின் க்னோம் வரைகலை நூலகம் Clutter கீழ் காணும் மேம்பாடுகளை தருகிறது:

  • இது போன்ற புதிய செயல்கள் ClutterGestureAction எழுத்து சமிக்ஞை இனம்காணிகளுக்கு, ClutterSwipeAction தீட்டல் இனம் காணிகளுக்கு, ClutterDropActionசெயலிகளை இலக்குகளை கைவிட, ClutterDragAction, அதிகநேர அழுத்த ஆதரவு ClutterClickAction.
  • ClutterState நிலை மாறுதல்கள் பொருள் சமிக்ஞைகளுக்கு கட்டுப்படுத்தலாம், இவற்றில் ஒரு காட்சியை உருவாக்கும்போது ClutterScript.
  • மேம்படுத்தப்பட்டகெய்ரோ வரைதல் ஒருங்கிணைப்பு.
  • Cogl, க்லட்டரின் ஜிபியூ நிரலாக்க இடைமுகம் தனி நூலகமாக காட்டப்படுகிறது.

4.4. கைவிடப்பட்ட நூலகங்கள்

காலாவதியான தொழில் நுட்பங்கள் புதிய உயர்வான சேவையால் மாற்றப்படும் தொடரும் வேலை இன்னும் முன்னேறியுள்ளது.

  • GConf இப்போது D-Bus ஐ முன்னிருப்பாக பயன்படுத்துகிறது. அதனால் ORBit2 பயன்பாடு இனி தேவையில்லை. இதனால் கைவிடப்பட்ட ORBit2 and libIDL நூலகங்கள் க்னோம் இலிருந்து நீக்கப்பட்டன.
  • க்னோம் கரு கூறுகள் இப்போது உள்நோக்கு பைதான் பந்தங்கள்(pygobject-3) ஐ மட்டும் சார்ந்துள்ளன. ஆகவேpygtk, gnome-python and gnome-python-desktop ஆகியன் இனி தேவையில்லை.
  • பல பயன்பாடுகள்(உதாரணமாக Accerciser, Dasher, GHex, வரைகலை வழுநீக்கி the graphical debugger Nemiver, மற்றும் கடவுச்சொல், குறியாக்க விசை மேலாளர் கருவி Seahorse) இப்போது GSettings ஐ சேமிப்பு பின்முகமாக பயன்படுத்துகின்றன. GConf ஐ அல்ல.
  • பல பொதிகள் Epiphany வலை உலாவி போன்றவை dbus-glib ஐ பயன்படுத்துவதில் இருந்து GDBusக்கும் libunique இலிருந்து G(tk)Application க்கும் மாற்றப்பட்டுள்ளன.

4.5. ஜேஹெச் பில்ட் ஐ பயன்படுத்தி க்னோ ஐ கட்டுமானம்ச் செய்வது இப்போது இன்னும் எளிது.

க்னோமின் கட்டுமான கருவி JHBuild உங்கள் கணினியில் உள்ள பதிப்பு சமீபத்தியது ஆனால் கூறை கட்டுவது இல்லை. இது வடிவமைப்பு தேர்வு partial_build ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது. முன்னிருப்பாக அது செயலில் இருக்கிறது. கட்டளைjhbuild sysdeps எந்த கணினி கூறுகள் காணப்பட்டன எவை கட்டுமானம் செய்யப்படும் என பட்டியலிடுகிறது.

சமீபத்திய வினியோகத்தில் இருந்து க்னோம் ஐ கட்டுமானம் செய்ய துவங்கினால் இது சுலபமாக 50 கூறுகளை கட்டுமானம் செய்யப்போகும் பட்டியலிலிருந்து விட்டுவிடும்.

4.6. மிச்ச உருவாக்குவோர் இற்றைப்படுத்தல்கள்

மற்ற க்னோம் தள முன்னேற்றங்கள் 3.2 இல் சேர்ந்தவை:

  • பாரம்பரிய பைதான் (நிலைமாறா) பந்தங்கள் PyGObject 3.0 க்கு நீக்கப்பட்டன. இன்ட்ரோஸ்பெக்ஷன் வழியாக இயங்குநிலை பைதான் பந்தங்கள் மட்டுமே தரப்படும். PyGObject 2 மற்றும் 3 ஆகியன ஒரே நேரத்தில் பக்கத்தில் நிறுவ இயலும். ஏனெனில் PyGObject 2 பொதிகளில் முன்னிருப்பாக இன்ட்ரோஸ்பெக்ஷன் செயல் நீக்கப்பட்டிருக்கும். மேல் தகவல்எப்படி பயன்பாடுகளை PyGObject 2 இலிருந்து PyGObject 3க்கு எடுத்துச்செல்வது கிடைக்கிறது.
  • Tracker பதிப்பு 0.12 பின் வருவனவற்றுக்கு ஆதரவு தருகிறது,Firefox ≥ 4.0 Thunderbird ≥ 5.0, MeeGoTouch, பல கூடுதல் SPARQL தருமதிப்புகள், EPub கோப்புகளீல் இருந்து தகவல் பெறுதல், மற்றும் மேல்மேசை கோப்புகளுக்கான உள்ளமை XDG அடைவுகள் .
  • NetworkManager பதிப்பு 0.9 இன்ரோஸ்பெக்ஷன் க்கும் எளிமையாக்கிய D-Bus API க்கும் ஆதரவை தருகிறது. மேல் தகவல்எப்படி பயன்பாடுகளை NetworkManager 0.8 லிருந்து 0.9க்கு மாற்றுவது கிடைக்கிறது
  • முன் கூறிய PKCS#11 ஐ குறியாக்கம் செய்த நூலகங்களுக்கு இடையில் பசையாக முன்னிருத்தும் முயற்சிகளால் gnome-keyringஇன் பல பகுதிகள் desktop-independent libraries ஆக துண்டிக்கப்பட்டுள்ளன.
  • GtkSourceView இப்போது மார்க்டவ்ய்ன் மற்றும் ஸ்டாண்டர்ட் எம்எல் கோப்புகளின் இலக்கண சிறப்புச்சுட்டுதலை ஆதரிக்கிறது
  • Evolution-Data-Server பல இன்ட்ரோஸ்பெக்ஷன் ஆதரவு பிழைநீக்கங்களை பெற்றது.
  • libfolks இப்போது ஒரு எவல்யூஷன் பின் புல தரவு சேவையகத்தை உடையதாக இருக்கிறது. இதை புதிய Contacts பயன்பாடு உபயோகிக்கிறது.
  • ஆவணங்கள் செயலாக்க கருவிகள் இடையில், gnome-doc-utils மற்றும் xml2po மெதுவாக yelp-tools மற்றும் itstool ஆல் இடமாற்றம் செய்யப்படுகின்றன. yelp-xsl இல் சில சோதனை Mallard நீட்சிகள் உள்ளன. அவை கட்டுப்பாட்டு செயலாக்கம் இயங்குநிலை அகராதி போன்றவை.

5. பன்னாட்டுமயமாக்கம்

உலகளாவிய க்னோம் மொழிபெயர்ப்பு திட்டம், உறுப்பினர்களுக்கு நன்றீ தெரிவிப்போம். இவர்களால் க்னோம் 3.2 50 க்கு மேற்பட்ட மொழிகளுக்கு குறைந்தது 80 சதவிகித சரங்களாவது மொழிபெயர்க்கப்பட்டு ஆதரவு கிடைக்கிறது. பல மொழிகளில் பயனர், மற்றும் மேலாளர் கையேடுகளும் இவற்றில் அடங்கும்.

ஆதரவுள்ள மொழிகள்:

  • அசாமீஸ்
  • அராபிக்
  • அஸ்டுரியன்
  • இத்தாலியன்
  • இந்தோனேசியன்
  • உக்கிரேனியன்
  • உய்குர்
  • எஸ்டோனியன்
  • கடலான்
  • கடலான் (வெலன்சியன்)
  • கிரீக்
  • குஜராத்தி
  • கேலிசியன்
  • கொரியன்
  • செக்
  • செர்பியன் (சிரிலிக்
  • செர்பியன் இலத்தீன்
  • சைனீஸ் (சீனா)
  • சைனீஸ் (தைவான்)
  • சைனீஸ் (ஹாங்காங்)
  • ஜப்பானியம்
  • ஜெர்மன்
  • டச்சு
  • டர்கிஷ்
  • டானிஷ்
  • தமிழ்
  • தாய்
  • நார்வேஜியன் பொக்மால்
  • பஞ்சாபி
  • பல்கேரியன்
  • பின்னிஷ்
  • பேஸ்க்
  • போர்துக்கீஸ்
  • போலிஷ்
  • ப்ரிட்டிஷ் ஆங்கிலம்
  • ப்ரென்ச்
  • ப்ரேசிலியன் போர்ச்சுகீஸ்
  • ரஷ்யன்
  • ரோமானியன்
  • லாட்வியன்
  • லிதுவேனியன்
  • வியட்னாமீஸ்
  • ஸ்பானிஷ்
  • ஸ்லோவேனியன்
  • ஸ்வீடிஷ்
  • ஹங்கேரியன்
  • ஹிந்தி
  • ஹீப்ரு

இன்னும் பல மொழிகளுக்கு நிறைவுறாத ஆதரவு உள்ளது. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட சரங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

புள்ளி விவரங்களும் நீங்கள் எப்படி க்னோம் ஐ உங்கள் மொழியில் கிடைக்க உதவ முடியும் என்றும் மேல் தகவல்களும் க்னோமின் மொழி பெயர்ப்பு நிலை தளம் இல் கிடைக்கின்றன.

6. க்னோம் 3.2 ஐ பெறுவது

உங்கள் கணினியை க்னோம் 32. க்கு மேம்படுத்த அல்லது நிறுவ உங்கள் விற்பனையாளர் அலல்து வினியோகத்தின் அதிகார பூர்வமான பொதிகளை மட்டுமே பயன்படுத்துங்கள். பிரசித்தமான வினியோகங்கள் க்னோம் 3.2 ஐ சீக்கிரமே கிடைக்கச்செய்யும். சில ஏற்கெனெவே வளர்ச்சி நிலையில் இருந்த பதிப்பை கிடைக்கச்செய்துவிட்டன.

க்னோம் ஐ பயன்படுத்தி பார்க்க நினைத்தால் எங்கள் நிகழ்வட்டு பிம்பம் ஒன்றை தரவிறக்கி சோதித்து பாருங்கள். அவை எங்கள் க்னோம் ஐ பெறுதல் பக்கத்தில் கிடைக்கின்றன.

உங்களுக்கு பொறுமையும் தைரியமும் இருந்து க்னோம் ஐ கட்டுமானம் செய்ய நினைத்தால் இந்த தொடுப்பை பயன்படுத்துங்கள். JHBuild, இதனால் கிட் இலிருந்து மிகசமீபத்திய க்னோம் ஐ பெறலாம். ஜேஹெச் பில்ட் ஐ பயன்படுத்தி க்னோம் 3.2.x ஐ gnome-3.2 கூறு தொகுப்பில் இருந்து கட்டுமானம் செய்யலாம்.

7. க்னோம் 3.4 ஐ எதிர்பார்த்து...

க்னோம் 3 வரிசையில் அடுத்த வெளியீடு ஏப்ரல் 2012 க்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 3.4 க்கு மேம்பாடுகளும் புதிய சிறப்பியல்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

7.1. பயனருக்கு தெரியக்கூடிய மாற்றங்கள்

  • வளர்ந்து கொண்டிருக்கும் க்னோம்3 இல் வேலை தொடர்ந்தது. உதாரணமாக “சொடுக்கியை தொடரும் குவிப்பு” ஐ மேம்படுத்தினோம். இதனால் ஒரே நேரத்தில் பல பயன்பாடுகளை துவக்கி இயக்க முடிகிறது.
  • க்னோம் ஷெல் நீட்சிகளை இன்னும் சுலபமாக நிறுவ, செயலாக்க, செயல் நீக்க முடிகிறது. இதனால் நுண் திருத்தங்கள், மாற்றங்கள்ள் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் ஆகியன கிடைக்கின்றன.
  • ஐபஸ் இன் மேம்பட்ட செயலிணக்கத்தால் விசைப்பலகையால் நேரடி ஆதரவு இல்லாத சில எழுத்துருக்களையும் குறீகளையும் உள்ளிட முடிகிறது.
  • லிப் சோசியல்வெப் மூலமாக சமூக வலைப்பின்னலின் ஒருங்கிணைப்பு.
  • எம்பதி இன் புதிய அழைப்பு இடைமுகம் பயனர்களை வலைக்காமிரா மற்றும் ஒலிவாங்கிகளை தேர்ந்தெடுக்கவும், விடியோ முன்பார்வையை இடம் நகர்த்தவும் சில விடியோ விளைவுகளை காட்டவும் அனுமதிக்கிறது
  • சிஸ்டம்d ஐ பயன்படுத்தி தானியங்கி மல்டி-சீட் ஆதரவு
  • எவலூஷனில் by using instead of ஜிடிகேஹெச்டிஎம்எல் க்கு பதில் வெப்கிட் ஐ பயன்படுத்தி ஹெச்டிஎம்எல் செய்திகளின் மேம்பட்ட வரைவு

7.2. அணுகல் மாற்றங்கள்

  • சிம்பாலிக் மற்றும் அதி வேறுபாடு சின்னங்களின் விஸ்தாரமான அமைப்பின் வேலை நடக்கிறது. இந்த சின்னங்கள் புதிய அணுகல் மற்றும் முழுமையான அதி வேறுபாடு தலைகீழ் அதி வேறுபாடு கருத்துக்களை செயலாக்கும்
  • க்னோம் ஷெல் பெரிதாக்கியின் மேம்படுத்தல்கள் காரட், குவிப்பு தொடர்தல் ஆகியன; பிரகாசம் மற்றும் வேறுபாடு ஆகியவற்றின் கூடுதல் தேர்வுகள்.
  • க்னோம் ஷெல் அணுகல் மற்றும் அதை அணுக கருவிகள் ஆகியனவற்றுக்கு வேலை தொடருகிறது

7.3. உருவாக்குவோர் தொடர்பான மாற்றங்கள்

  • நடைதளத்தின் தொடரும் சுத்தப்படுத்தல் (உதாரணமாக டிபஸ்-க்ளிப் மற்றும் லிப்யுனிக் ஆகியவறில் இருந்து ஜிடிபஸ்/ஜி(டிகே)அப்ளிகேஷன் ஆகியவற்றுக்கு நகர்ந்தது, மற்றும் எவலூஷன் தரவு சேவையகத்தின் சேமிப்பு பின்புலத்தை ஜிகான்ஃப் இலிருந்து ஜிசெட்டிங்க்ஸ் ) க்கு மாற்றியது.
  • மூல குறியாக்க டார்பால்கள் .xz சுருக்கத்தில் மட்டுமே கிடைக்கும்.

8. நன்றி அறிதல்

இந்த வெளியீடு க்னோம் சமுதாயம் இன் கடின உழைப்பு மற்றும் சிரத்தை இல்லாமல் நடந்திருக்க இயலாது. எல்லாருக்கும் வாழ்த்துகள், நன்றி!

இந்த குறிப்புகளை தாராளமாக எந்த மொழியிலும் மொழி பெயர்க்கலாம். உங்கள் மொழியில் இதை மொழி பெயர்க்க விரும்பினால் GNOME Translation Project ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த ஆவணம் க்ரியேடிவ் காமன் ஷேர் அலைக் 3.0 லைசென்ஸ் இன் கீழ் வினியோகிக்கப்படுகிரது. காப்புரிமை© The GNOME Project.

இந்த வெளியீட்டு குறிப்புகள் ஒலவ் விட்டர்ஸ், ஆந்த்ரே க்ளாப்பர் மற்றும் ஆலன் டே அவர்களால் க்னோம் சமுதாயத்தின் உதவியுடன் தொகுக்கப்பட்டது. தமிழ் மொழி பெயர்ப்பு செய்தது வாசுதேவன் - க்னோம் தமிழ் குழுவிலிருந்து