அணுகலில் என்ன புதிது

இன்றைக்கு க்னோம் 3.2 அணுகலுக்கு மிக உகந்த மேல் மேசையாகும். எல்லாருக்கும் நம்பகமானதாயும் பயன்படுவதாயும் உள்ளதில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

க்னோம் 3.2 வரை உதவி தொழில் நுட்ப பயனர்களுக்கு ஒரு இரு தலை கொள்ளி எறும்பு நிலை இருந்தது. அணுகல் ஆதரவை இயங்கு நிலையில் துவக்க இயலவில்லை. AT-SPI2 இல் இப்போது உள்ள மேம்பாடுகள் காரணமாக மேல்மேசைகள் ஊடே அணுகல் ஆதரவு செயலில் உள்ளதா என அறிவதும் செயலாக்குவதும் முடிகிறது. க்னோம்தான் இதை முதலில் செய்துள்ளது. ஆகவே மேல்மேசைகள் ஊடே வேலை செய்ய இன்னும் மேம்பாடுகள் தேவையாக உள்ளது.

மற்ற மேம்பாடுகள்:

  • திரை விசைப்பலகை தேவையானவர்களுக்கு அதி நவீனமான ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    Figure 15திரை விசைப்பலகை
  • விசைப்பலகையுடன் மேல்பார்வை பாங்கு இப்போது முன் எப்போதையும் விட நன்றாக வேலை செய்கிறது. முழுமையாக விசைப்பலகை மூலம் நகர்வதுடன் திரைப்படிப்பி Orca பயனர்கள் உலாவும் போது நம்பகமான துல்லிய முன்வைப்பை பெறுகிறார்கள்.

  • Orca இன் இன்ட்ரோஸ்பெக்ஷன் நகர்வு க்னோம் இன் திரை படிப்பியை கண்டபடி விரைவாக்கி உள்ளது. இப்போது ஏடிகே பாலம் உதவி தொழில் நுட்பங்கள் செயலில் உள்ளபோது சமிக்ஞைகளுக்கு மட்டுமே செவிசாய்க்கிறது. ஆகவே அணுகல் ஆதரவு கணினியின் செயல்பாட்டை தரம் தாழ்த்த தேவையில்லை.

  • அணுகல் சேவை இடைமுகம் AT-SPI2 வெகுவாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது: சிதைவுகள், நினைவக ஒழுக்குகள், மற்றும் பலவித வழுக்கள் நீக்கப்பட்டுள்ளன.

  • க்னோமின் அணுகல் செயலாக்க நூலகம் Gail GTK+ உடன் முழுக்க முழுக்க ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது. ஆகவே அணுகல் இப்போது உள்ளமைந்தது, மேலே திணிக்கப்பட்டதல்ல என்ற நிலைக்கு இன்னும் அருகில் உள்ளது.